Latestமலேசியா

ஹடி அவாங் மீதான போலீஸ் புகார் சம்பந்தப்பட்ட எவரையும் விசாரணைக்கு அழைக்க முடியும் ஐ.ஜி.பி விளக்கம்

கோலாலம்பூர், மே 19 – பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் பாஸ் தலைவர் Hai Awang கிற்கு எதிராக அதிகமான புகார்கள் செய்யப்பட்டபோதிலும் விசாரணைக்கு உதவ எவரையும் போலீஸ் அழைக்கும் என போலீஸ் படைத் தலைவர் Acryl Sani Abdullah Sani தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அழைக்கப்படுவார்கள். இதுதான் எங்களது விசாரணையில் நாங்கள் பின்பற்றும் சீரான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை என Acryl Sani Abdullah கூறினார். நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற தேநீர் விருந்து உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

மலாய்க்காரர் அல்லாதார் மற்றும் முஸ்லிம் அல்லாதர் குறித்து அவர்களது உணர்வுக்கு எதிராகவும் ஒற்றுமை அரசாங்கத்தை சீர்குலைக்கும் மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் ஹடி ஹவாங் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பல்வேறு புகார்களை செய்துள்ளனர். பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேசனல் மற்றும் எதிர்க்கட்சி முன்னணி கவிழ்ப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஹடி அவாங் வெளியிட்ட அறிக்கைகைள் குறித்தும் செய்தியாளர்கள் வினவியபோது Acryl Sani இந்த விளக்கத்தை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!