Latestஉலகம்

காஸாவின் வட பகுதியில் மோசமான பஞ்சம் ஏற்படலாம் – ஐ.நா உணவுத் திட்டம் எச்சரிக்கை

நியூ யார்க், பிப் 28 – காஸாவின் வட பகுதியில் மோசமாக பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஹமாஸ் தரப்பினருக்கு எதிராக இஸ்ரேல் படைகளின் தாக்குதல் மேலும் மோசமாக இருக்கும் என்பதால் மனிதாபிமான அவசர உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுச் சேர்ப்பதில் முட்டுக்கட்டை ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அந்த ஐ.நா நிறுவனம் சுட்டிக்காட்டியது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களுக்கு உதவும்படி ஐ.நாவின் பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எந்தவொரு மாற்றமும் ஏற்படாவிட்டால் காஸாவின் வடபகுதியில் பஞ்சம் மோசமடையலாம் என உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குனர் Carl Saku ஐ.நா பாதுகாப்பு மன்றத்திடம் தெரிவித்திருக்கிறார். பஞ்சம் மற்றும் பட்டினி காஸாவில் பல இடங்களில் ஏற்டக்கூடும் என ஐ.நா மனிதாபிமான உதவி அலுவலகத்தைச் சேர்ந்த Ramesh Rajasingam மும் எச்சரித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!