
கோலாலம்பூர், செப் 4 – அரச மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ப்பாஸ் கட்சித் தலைவர் ஹடி அவாங் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட சட்டத்துறை அலுவலகத்திடம் போலிஸ் பரிந்துரைத்துள்ளது.
இன்று மாரான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹடி அவாங்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக போலிஸ் படைத் துணைத் தலைவர் ஆயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார். அவரிடம் கேட்கப்பட்ட 24 கேள்விகளில் ஹடி 5 கேள்விகளுக்கு பதில் கொடுத்ததாகவும் மீதமுள்ள 19 கேள்விகளுக்கான பதிலை நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளதாகவும் ஆயுப் கான் தெரிவித்தார்.
நிந்தனைச் சட்டத்தின் 4வத்உ பிரிவின் கீழும் 233வது செக்ஷனிலும் அவர் மீது குற்றம் சாட்ட நாங்கள் பரிந்துரைத்தாலும் குற்றம் சாட்டுவதா இல்லையா என்பது சட்டத்துறை அலுவலகத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது என்றார் அவர்.
ஒரு குற்றவாளிக்கு அரச மன்னிப்பு வாரியம் மன்னிப்பு வழங்குவது இஸ்லாத்துக்கு எதிரானது என கடந்த ஆகஸ்ட்டு 26ல் ஹடி ஜோகூர் பிரச்சாரத்தில் பேசியதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.