
கோலாலம்பூர், அக்டோபர் 31 – ஹமாஸை பயங்கரவாத கும்பலாக அறிவிக்க மறுத்ததால், அமெரிக்க தூதரகம், மலேசியாவுக்கு மூன்று நடத்தை நோட்டீஸ்களை அனுப்பியுள்ளதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ளார்.
அதில் இரு நோட்டீஸ்களை, மலேசியா முறையே அக்டோபர் 13 மற்றும் 30-ஆம் தேதிகளில் பெற்ற வேளை; மற்றொரு நோட்டீஸில் தேதி குறிப்பிடப்படவில்லை என பிரதமர் சொன்னார்.
ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுத்ததாலும், ஹமாஸை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த தவறியதாலும், மலேசியாவுக்கு அந்த மூன்று நோட்டீஸ்கள் அனுபப்பட்டுள்ளதை, வெளியுறவு அமைச்சு தம்மிடம் தெரிவித்ததாக, பிரதம் குறிப்பிட்டார்.
எனினும், அண்மையில் எற்பாடு செய்யப்பட்ட, பாலஸ்தீன ஆதரவு கூட்டத்தில் அந்த நோட்டீசுகளுக்கு தாம் பதிலளித்து விட்டதாகவும், மலேசியா தனது மனிதாபிமான
கொள்கையில் உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.