
கோலாலம்பூர், ஆக 24 – எதிர்க்கட்சித் தலைவரும் பெர்சத்து கட்சியின் தலைமை செயலாளருமான Hamazah Zainudin மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அரசியல்வாதிக்கு எதிராக Macc விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இணையத் தள பதிவேடு ஒன்று தகவல் வெளியிட்டது. இது குறித்து உள்நாட்டு வருமான வரி வாரியத் கருத்துரைக்க மறுத்துவிட்டது. வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே வெளியிட முடியும் என அந்த வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வருமான வரி வாரியத்தின் அதிகாரிகள் கோலாலம்பூரில் உள்ள ஹம்சாவின் வீட்டில் சோதனை நடத்தியதோடு அவரது வங்கிக் கணக்கு மற்றும சொந்த விவரங்கள் தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது.