
பெர்லின் , நவ 5 – பிணையாளி விவகாரம் தொடர்பான நெருக்கடியினால் ஹம்பர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இரவு வு 8 மணியளவில் துப்பாக்கிக்காரன் ஒருவன் விமானம் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பகுதியில் தமது காரை மோதத் செய்தான்.
அதற்கு முன்னதாக அந்த துப்பாக்கிக்காரன் இரண்டு முறை வானில் எச்சரிக்கை வேட்டுக்களை கிளப்பினான். மேலும் அந்த காரிலிருந்து தீ எரிந்துகொண்டிருந்த நிலையில் இரண்டு போத்தல்களும் வீசப்பட்டதாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த காரில் ஒரு குழந்தை உட்பட இரண்டு தனிப்பட்ட நபர்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த கார் ஓட்டுனரின் மனைவி தமது குழந்தை கடத்தப்பட்டதாக அவசர உதவிப் பிரிவுக்கு எச்சரிக்கை செய்திருந்ததையும் போலீசார் தெரிவித்தனர்.