ஹரிமாவ் மலாயா காற்பந்து குழுவின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பீட்டர் கிளமோவ்ஸ்கி நியமனம்
கோலாலம்பூர், டிச 16 – அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தகுதிச் சுற்று போட்டிக்கு தயாராகும் ஹரிமாவ் மலாயா காற்பந்து குழுவின் புதிய பயிற்சியாளராக Tokyo FC கிளப்பின் முன்னாள் நிர்வாகியான ஆஸ்திரேலியாவின் பீட்டர் கிளமோவ்ஸ்கி
( Peter Cklamovski ) நியமிக்கப்பட்டுள்ளார். 46 வயதாகும் பீட்டர் இதற்கு முன் 15 ஆண்டுகள் Tottenham Hotspur குழுவின் நிர்வாகி Ange Postecoglau தலைமையில் அந்த கிளப்பின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த இருவர் தலைமையிலான ஆஸ்திரேலியா தேசிய காற்பந்து அணி 20215ஆம் ஆண்டில் ஆசிய கிண்ணத்தை வென்றது. மேலும் ஜப்பானின் Yokohama F. Marinos கிளப் 2019 ஆம் ஆண்டு லீக் வெற்றியாராக வாகை சூடுவதற்கும் ( Peter Cklamovsi ) முக்கிய பங்காற்றியுள்ளார்.
தொடக்கக் கட்டமாக சவுதி அரேபியலாவில் நடைபெறவிருக்கும் 2027 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு F தகுதி சுற்று பிரிவிலிருந்து ஹரிமாவ் மலாயா குழு தேர்வு பெறச் செய்வதற்கான முக்கிய இலக்கை பீட்டர் கொண்டுள்ளார். இதுதவிர அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் தரநிலைப் பட்டியலில் 100 இடங்களுக்குள் ஒரு இடத்தை ஹரிமாவ் மலாயா குழு பிடிப்பதை உறுதிப்படுத்தும் லட்சியத்தை நிறைவேற்றும் இலக்கையும் அவர் கொண்டுள்ளார்.