
ஹரி ராயா பெருநாள் காலத்தில், நாட்டிலுள்ள முதன்மை நெஞ்சாலைகளை சுமார் 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் உள்ள வாகனங்களை காட்டிலும், அந்த எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகமாகுமென பிளாஸ் நடவடிக்கை பிரிவு தலைமை அதிகாரி டத்தோ ஜாக்காரியா அஹ்மட் ஜபிடி தெரிவித்தார்.
வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்கொள்ள பிளாஸ் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் டத்தோ ஜாக்காரியா சொன்னார்.
நெடுஞ்சாலை பாதுகாப்பு, நெரிசல்மிகுந்த இடங்களில் கண்காணிப்பு, டோல் சாவடிகள் நிர்வகிப்பு, ஓய்வுப் பகுதிகளில் கூடுதல் வசதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.