Latest

ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு அனுமதியில்லை

கோலாலம்பூர், மே 4 – இம்மாதம் வரவேற்கப்படும்  ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு,  நாடு முழுவதும் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்துவதற்கு அனுமதியில்லை.

EMCO மக்கள் நடமாட்டம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் , ஹரி ராயாவிற்கு , நண்பர்கள் , உறவினர்கள் ஆகியோரின்  வீடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

MCO, EMCO கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் இருக்கும் பகுதிகளில் , பெருநாளை முன்னிட்டு கல்லறைகளுக்குச்  செல்லவும் அனுமதியில்லை என அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

எனினும், CMCO எனப்படும்  நிபந்தனையுடன் கூடிய பகுதிகளிலும், RMCO எனப்படும்  மீட்சி நிலையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளிலும், Syawal மாதத்தின்  முதல் நாளில் இருந்து மூன்றாம் நாள் வரை , கடுமையான விதிமுறைகளுடன்  மக்கள்,  பிறரது இல்லங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இவ்வேளையில், MCO  அமலில் உள்ள பகுதிகளில்  Syawal  முதல் நாளன்று மட்டுமே  விருந்தினர்களை வரவேற்க முடியும்.  ஒரு நேரத்தில் 15 க்கும் மேற்பட்டோர் கூடியிருக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று மாலை மணி ஐந்துக்கு  தொலைக்காட்சியில் நேரலையாக ,  கோவிட் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளையும், ஹரி ராயாவுக்கான விதிமுறைகளையும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!