
இம்மாதம் 15-ஆம் தேதி, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள, குறிப்பிட்ட சில இலகு இரயில் நிலையங்களின் சேவை நேரம் பின்னிரவு மணி 1.30 வரை நீட்டிக்கப்படவுள்ளதாக, Rapid Rail நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, இறுதி கட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களின் தேவைகளை பூர்த்திச் செய்ய ஏதுவாக அந்த சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது.
குறிப்பாக, கெலானா ஜெயா வழித்தடத்திலுள்ள, மஸ்டிட் ஜாமிக், கேல்சிசி, அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் LRT சேவை நேரமும் ;
காஜாங், புக்கிட் புந்தாங் வழித்தடத்க்துக்கான MRT சேவை நேரமும் ;
புக்கிட் பிந்தாங், ராஜா சூலான், மேடான் துவான்கு, செளகிட் ஆகிய பகுதிகளுக்கான Monorel சேவையும் பின்னிரவு மணி 1.30 வரை நீட்டிக்கப்படவுள்ளது.
மேல் விவரங்களுக்கு, MyRapidKL நிறுவனத்தின் ட்விட்டர், முகநூல் சமூக ஊடகங்களையும், இணைய அகப்பக்கத்தையும் பொதுமக்கள் வலம் வரலாம்.