Latestமலேசியா

ஹலால் அல்லாத உணவு கடைகளில் ‘Menu Rahmah’-வுக்கு பதில் Menu Kasih Sayang

கோலாலம்பூர், பிப் 23 – முஸ்லீம் அல்லாதவர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, ஹலால் அல்லாத உணவு கடைகளிலும் Menu Rahmah திட்டத்தை விரிவுப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளது.

இவ்வேளையில், குறைந்த விலையில் உணவை விற்கும் அந்த Menu Rahmah திட்டம், ஹலால் அல்லாத உணவு கடைகளில் Menu Kasih Sayang என்றழைக்கப்படலாம் என , உள்நாட்டு வாணிப, வாழ்கை செலவீனம் மீதான அமைச்சர் Salahuddin Ayub தெரிவித்தார்.

சீன உணவக நடத்துநர் சங்கத்தினர் , வசதி குறைந்தவர்களுக்கு மலிவான விலையில் உணவை விற்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் Menu Rahmah – விற்குப் பதிலாக , Menu Kasih Sayang எனும் பெயரை பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!