கோலாலம்பூர், செப்டம்பர் 17 – ஹலால் என்பது மது பானம் மற்றும் பன்றி இறைச்சி இல்லாத உணவுகளை மட்டுமே குறிப்பதல்ல என்றார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்.
கடந்த காலத்தில், ஹலால் என்பது பன்றி இறைச்சி, மது பானப் பயன்பாடு ஓர் உணவில் இல்லை என்பதை மட்டுமே குறிக்கும். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.
தற்போது, ஹலால் என்பது உணவு பாதுகாப்பு, தூய்மை மற்றும் ஆபத்தான தயாரிப்புகளைத் தவிர்ப்பதற்கான நவீன முறைகளைப் பயன்படுத்துவதையும் குறிக்கின்றது என்று விளக்கமளித்தார், பிரதமர்.
இதனிடையே, ஹலால் சான்றிதழ் அனைத்துலக அளவில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை விட கடுமையான தரங்களைக் கோருவதால், அது உலக அளவில் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.