
புத்ராஜெயா, செப்டம்பர் 15 – கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெறும்
Group of 77 + சீனா ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க மலேசியப் பிரதமரைப் பிரதிநிதித்து வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதர் கலந்துகொள்வார். பொது விவாதத்தின் போது அவர் மலேசியாவின் தேசிய அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் , காலநிலை மாற்றம், இலக்கவியல் வேறுபாடு மற்றும் அறிவியல் தொழிற்நுட்ப துறையில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் மலேசியாவின் முயற்சி மற்றும் மற்றும் ஆர்வத்தை அவர் வெளியிடுவார்.
தற்போதைய வளர்ச்சி சவால்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உச்சநிலை மாநாடு, தெற்கின் முக்கிய சவால்கள் மற்றும் முக்கிய வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள மலேசியாவுக்கு வாய்ப்பாக அமையும் என்று வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.