ஹாங்காங், மே 2 – ஹாங்காங்கை, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை, கிட்டத்தட்ட 10,000 மின்னல் தாக்கியதாக, அந்நகரின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக பருவமழை ஏற்படும் ஏப்ரல் மாதத்தில், ஹாங்காங்கில் அதிக ஈரப்பதம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்கு திடீரென அடை மழை பொழியலாம் எனும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு மணி ஒன்பது தொடங்கி, ஹாங்காங் வான்ம் பிரகாசமாக காட்சியளித்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் அங்க்கு ஐயாயிரத்து 914 மின்னல்கள் பதிவுச் செய்யப்பட்டதாக, கண்காணிப்பு மையம் தெரிவித்தது.
அதனை தொடர்ந்து புதன்கிழமை காலை மணி 10.59-க்கும் ஒன்பதாயிரத்து 437 மின்னல்கள் தாக்கின,
அவற்றில் பெரும்பாலானவை, ஹாங்காங்கின் கிழக்கு மாவட்டத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, செவ்வாய்கிழமை இரவு பெய்த இடியுடன் கூடிய அடை மழை, ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் தாமதத்தை ஏற்படுத்தியதோடு, பல இடங்களில் பல புயல்காற்றையும் ஏற்படுத்தியது.
அந்நிலை இன்றும், நாளையும் தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.