ஹாங்காங் பொது விருது பேட்மின்டன் போட்டி: பியர்லி – எம். தீனா இறுதியாட்டத்திற்கு தேர்வு

கோலாலம்பூர், செப் 16 – ஹாங்காங் பொதுவிருது பேட்மிண்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பியர்லி டான்- எம் தினா இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றனர். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பியர்லி டான் – தீனா ஜோடி 21-13, 21-18 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் Benyapa Aimsaard – Nuntakan Aimsaard இணையை வீழ்த்தினர். இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே பியர்லி டான் இணை சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி 36 நிமிடங்களில் தங்களது ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். ஹாங்காங் பொது விருது பேட்மிண்டன் போட்டியின் இறுதியாட்டம் நாளை நடைபெறும். நாளைய ஆட்டத்தில் இந்தோனேசியா அல்லது டென்மார்க் ஜோடியை பியர்லி டான் – தீனா சந்திப்பார்கள்.
இதனிடையே மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதியாட்டத்திற்கு தேர்வு பெறும் முயற்சியில் மலேசியாவின் Goh Jin Wei தோல்வி கண்டார். அவர் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் Zhang Yi Man னிடம் 14 -21, 11-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி கண்டார்.