Latestமலேசியா

ஹிசாமுடின் பிரதமராகுவதற்கு பாஸ் கட்சியுடன் உடன்பாடா ? வாரிசான் மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 11- புதிய பிரதமராக ஹிசாமுடின் நியமிக்கப்படுவற்கு பாஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டதாக வெளியான தகவலை வாரிசான் கட்சி மறுத்துள்ளது. அந்த உடன்பாட்டில் இருந்த தமது கையெழுத்து போலியான ஒன்று என வாரிசான் கட்சியின் தலைமைச் செயலாளர் லோரெட்டோ படுவா ஜே,ஆர் கூறினார். அந்த உடன்பாட்டில் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டது. இப்படியொரு உடன்பாடு வெளியானதாக கூறப்படுவதும் பொய்யான தகவலாகும்.
அந்த உடன்பாட்டில் இடம்பெற்ற அம்சங்களை தாம் வன்மையாக மறுப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் லோரெட்டோ தெரிவித்தார். தனிப்பட்ட நபர் எவரும் பிரதமராக்குவதற்கான பாஸ் கட்சியின் எந்தவொரு உடன்பாட்டிலும் தனிப்பட்ட முறையில் தாம் இணக்கம் தெரிவிக்கவோ அல்லது கையெழுத்திடவில்லையென அவர் கூறினார். மேலும் இது தொடர்பான வெளியான ஊடக அறிக்கைக்கும் வாரிசானுக்கு தொடர்பு இல்லை. இந்த விவகாரம் குறித்து தமது வழக்கறிஞர்களுடன் விவாதித்த பின்னர் போலீசில் புகார் செய்யப்போவதாகவும் லோரெட்டோ தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!