
இந்தோனேசியாவில், பெண் ஒருவரின் உடலில் ஊசி இருப்பது எக்ஸ்ரே ஒளிக்கதிர் சோதனை வாயிலாக தெரியும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
ஹிஜாப் அணியும் போது வாயில் வைத்திருந்த ஊசியை அப்பெண் தவறுதலாக விழுங்கியதாக நம்பப்படுகிறது.
12 மணி நேரத்திற்கும் மேலாக அந்த ஊசி வெளியேறாமல் வயிற்றிலேயே இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்படும் என அந்த காணொளியை வெளியிட்ட Tiktok பயனர் பதிவிட்டுள்ளார்.