புது டில்லி, பிப் 11 – இந்தியாவில் , மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம், சர்ச்சையாகி ஆர்ப்பாட்டமாக வெடித்துள்ளதை அடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றம், மாணவர்கள் அரசாங்க கல்வி கூடங்களுக்கு சமயம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்வதற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருக்கின்றது.
அந்த விவகாரம் தொடர்பில் , தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் வரை அந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்குமென தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
அந்த விவகாரம் தொடர்பான வழக்கை செவிமடுக்க நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.