ஹிரோவிமா, செப்டம்பர் 26 – ஜப்பான், ஹிரோஷிமா Nishi ward நகரில் இன்று காலை 8:50 மணியளவில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளத்திற்கு நிலத்தடி நீர் குழாய் வெடித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனால், சாலையின் ஒரு பகுதி பள்ளமாகிவிட்டதாகவும், அப்பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் சாய்ந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்குவதால், காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், அங்கு வாழும் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வேளையில், கட்டிடங்களில் சிக்கிய பலரும், பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அந்நகரின் தீயணைப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
வீடுகள் சாய்ந்தும், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டும், சுற்றியுள்ள பகுதிகளில் குழாய் நீர் மஞ்சள் நிறமாக இருப்பதாகவும் கூறப்பட்டுகிறது.