ஈப்போ, ஏப் 24 – ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த மூவரின் குடும்பத்தினர் பேரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவி வழங்குவது குறித்து பேரா மாநில அரசாங்கம் ஆராயும் என சுகாதார மனிதவள , தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் A. Sivanesan தெரிவித்திருக்கிறார். அடுத்த வாரம் பேரா ஆட்சிக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என அவர் கூறினார். நேற்று லுமுட்டில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வான் உயரே மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 10 பேரில் , Sivasutan Thanjappan, Mohd Shahrizan Mohd Termizi மற்றும் Noorfarahimi Mohd Saedy பேரா மாநிலத்தை சேர்ந்தவர்களாவர்.
இது தொடர்பான அறிக்கை மந்திரிபெசாரிடம் வழங்குவதற்கு முன் அந்த அறிக்கையை பெறுவதற்காக தாம் தடயயியல் துறைக்கு செல்லப்போவதாக சிவநேசன் தெரிவித்தார். நாங்கள் அடுத்த வாரம் ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதித்து வாரிசுதாரர்களுக்கு எத்தகைய உதவி வழங்குவது என்பது குறித்து ஒரு முடிவை எடுப்போம் என அவர் கூறினார். அந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களை தற்காப்புத்துறை துணையமைச்சர் Adly Zahari யுடன் இன்று சந்தித்த பின் சிவநேசன் இத்தகவலை வெளியிட்டார்