பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 24 – தாய் ஒருவர் தனது மகனைத் தேடி ஸ்னூக்கர் மையத்தில் ஆடையை மாட்டும் கம்பி அதாவது, ஹேங்கருடன் அதிரடியாக நுழைந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டிக் டோக்கில் வைரலான அந்த காணொளியில், தாய் ஒருவர் ஹேங்கருடன் அந்த ஸ்னூக்கர் மையத்தில் மகனைத் தேடுவதைக் காணமுடிகிறது.
தனது தாயின் இருப்பை கவனிக்காத மகனோ, நண்பர்களுடன் விளையாட, கையும் களவுமாகப் பிடிபட்டார்.
‘பணி ஓய்வு பெற்ற காவலர், குழந்தையைப் பார்க்க வந்தார்’ என்ற தலைப்புடன் பதிவேற்ற அக்காணொளி, சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை தங்களது தாய்மார்களும் செய்துள்ளனர் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.