
குவந்தான், ஜூலை 28 – கெந்திங் மலையில் ஒரு ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் தமது வாய், கண்கள் மற்றும் முகத்தில் காயம் அடைந்த நிலையில் வயதான ஆடவர் ஒருவர் இறந்துகிடந்தார். 67 வயதுடைய அந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டதை Bentong மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடண்ட் Zaiham Mohd Kahar உறுதிப்படுத்தினார். அந்த ஆடவருக்கும் உள்நாடடைச் சேர்ந்த மற்றொரு 38 வயது ஆடவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு அதன் பிறகு அவர்கள் கார் நிறுத்துமிடத்திற்கு சென்று மீண்டும் சண்டையிட்டதாக அங்குள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் தெரியவந்ததாக Zaiham கூறினார். ஹோட்டல் அறை தொடர்பாக அவ்விரு நபர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது என தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.