
கோலாலம்பூர், பிப் 12 – தங்களது அறைகளில் பேய் நடமாட்டம் இருப்பதால் முன் பதிவுக்கு செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்கும்படி ஹோட்டல்களின் விருந்தினர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக மலாக்கா ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஹோட்டல் அறையில் தாங்கள் தங்யிருக்கும்போது எதிர்பாரத அபூர்வ சக்தி ஒன்றை தாங்கள் எதிர்நோக்குவதால் பணத்தை திரும்ப ஒப்படைக்கும்படி விருந்தினர்களிடமிருந்து கோரிக்கைகளை சில ஹோட்டல்கள் எதிநோக்குவதாக மலாக்கா ஹோட்டல்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் Sazali Sabri தெரிவித்தார். விடுமுறை காலத்தின்போது மலாக்கா நகரிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஹோட்டல்களில்தான் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறி முன்பதிவு கட்டணத்தை ஹோட்டல் விருந்தினர்கள் கோருவதாக அவர் கூறினார். எனினும் முன்பதிவுக் கட்டணத்தை திரும்ப வழங்குவது ஹோட்டல் நிர்வாத்தின் பிரத்தியோக உரிமையாகும் என Sazai Sabri தெரிவித்தார்.