புத்ராஜெயா, செப்டம்பர் -26 – நாட்டிலுள்ள ஹோட்டல்களில் check-in பதிவுகள் விவகாரத்தை, சுற்றுலா-கலை-பண்பாடு அமைச்சு (Motac) அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
அவ்விஷயத்தில் ஹோட்டல் தொழில்துறையினர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென அமைச்சு கூறியது.
Check-in பிரச்சை தொடர்பான மேல் விவரங்களை பொது மக்கள் info@motac.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஹோட்டல்களில் முன்பதிவு செய்யும் முன்னர் அவற்றின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பொதுமக்கள் ஒருமுறைக்கு இருமுறை படித்து தெளிவுப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.
இதன் மூலம், கட்டணம் மற்றும் சேவைத் தரம் குறித்து பிறகு அதிருப்தி அடைவதைத் தவிர்க்க முடியும் என அமைச்சு தெரிவித்தது.
அண்மையில் சில ஹோட்டல் நடத்துநர்கள் check-in நேரங்களை மாலை 4 மணிக்கும் check-out நேரங்களை காலை 11 மணிக்கும் நிர்ணயித்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்நடைமுறையானது, குறுகிய காலம் மட்டுமே தங்கியிருக்க அனுமதிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அது நியாயமானதல்ல என வலைத்தளவாசிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.