
கோலாலம்பூர், ஏப் 20 – மேலுமொரு பொதுத் தேர்தல் வரையில், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், PKR கட்சியை வழிநடத்துவார் .
அதையடுத்து, தலைமைத்துவம் மாற்றம் தொடர்பான தெளிவான திட்டத்தை தாங்கள் கொண்டிருப்பதாக அக்கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் Fahmi Fadzil உள்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
அரசியலில், அன்வாருடன் போட்டியிட்ட அல்லது இணைந்து பணியாற்றிவர்கள் ஒவ்வொருவராக ஒய்வு பெற்று வருகின்றனர். அந்த முடிவு அன்வாரையும் பாதித்துள்ளது. எனினும், அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அவர் கட்சியை வழிநடத்துவாரென Fahmi குறிப்பிட்டிருக்கிறார்.