Latestமலேசியா

அதிக ரசாயன கலப்பு; Haagen Dazs வகை பனிக்கூழ் சந்தையிலிருந்து மீட்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிகமான ரசாயனம் கலந்திருந்ததால், Haagen- Dazs முத்திரையிலான Vanilla பனிக்கூழ், நாட்டின் சந்தையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட பனிக்கூழ் நிறுவனம் தாமாகவே சந்தையிலிருந்து அதன் தயாரிப்பினை மீட்டுக் கொண்டிருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

உடல் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய , காசினோஜன் ( carcinogen) ரசாயனத் தன்மை கொண்ட எத்திலின் ஆக்சைட் ( Ethylene Oxide) பொருள், அந்த பனிக்கூழில் அதிகளவில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!