Latestஉலகம்

அந்நிய செலாவணி சரிவு ; மேலும் அதிகமான சுற்றுப் பயணிகளை வரவேற்க காத்திருக்கிறது ஜப்பான்

Tokyo, அக் 11 – அந்நிய சுற்றுப்பயணிகள் இன்று தொடங்கி மீண்டும் விசா பயண அனுமதியின்றி ஜப்பானுக்கு பயணிக்கலாம். கோவிட்-19 பெருந் தொற்றுக்கு முன் விசா இன்றி ஜப்பானுக்கு பயணிக்கும் முறை அமலில் இருந்தது. அதே சமயம், அமெரிக்க டாலருக்கு எதிரான Yen-னின் மதிப்பும் சரிவு கண்டுள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதிகமான அந்நிய சுற்றுப் பயணிகள் ஜப்பானுக்கு வருகை புரிவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சுற்றுலாத் தலங்கள், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கடைகள், வான் போக்குவரத்து துறை ஆகியவை சுற்றுப் பயணிகளை வரவேற்க தயார் நிலையில் உள்ளன. கோவிட்-19 பெருந் தொற்றால் நாட்டின் நுழைவாயில்களை மூடிய ஜப்பான், கடந்த ஜூன் மாதம் தொடங்கி குழுவாக செல்லும் சுற்றுப் பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது.

தற்சமயம், அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாட்டின் All Nippon Airways நிறுவனமும், Japan Airlines நிறுவனமும் கூடுதல் விமான சேவைகளை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாண்டு சுற்றுலாத் துறை வாயிலாக, மூவாயிரத்து 500 கோடி அமெரிக்க டாலர் வரையில் வருமானம் ஈட்ட முடியுமென ஜப்பான் கணித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!