Latestமலேசியா

கொள்ளையினால் பெண் தொழில் அதிபருக்கு ரி.ம 35 லட்சம் இழப்பு பல கோணங்களில் விசாரணை தீவிரம்

கோலாலம்பூர் – செந்தூல் Padang Balang-கில் வீட்டை உடைந்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கொளையடித்த சம்பவத்தில் பெண் தொழில் அதிபர் ஒருவர் சுமார் 3.5 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குள்ளானதை தொடர்ந்து போலீசார் பல கோணங்களில் விசாரணையை நடத்தி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Allaudeen Abdul Majid தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு தங்களுக்கு கால அவகாசம் வழங்கும்படி அவர் கூறினார். இந்த கொள்ளை தொடர்பான விசாரணையில் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகிறது. கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் ஊடகப் பயிற்சியாளர்களுடனான தேநீர் நிகழ்வுக்குப் பின் அவர் இதனை தெரிவித்தார். கொள்ளையர்கள் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் அடங்கிய இரும்புப் பெட்டியை திருடிச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்கிடையே நடந்த சம்பவத்தில் பல்வேறு பிராண்டுகளைக் கொண்ட கைப்பைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக Wangsa Maju மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ashari Abu Samah இதற்கு முன் கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தொழில் முனைவரின் குடும்ப உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பெறப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!