Latestமலேசியா

மும்பை விமான நிலையத்தில் மலேசிய பயணிகள் தவிப்பா?; மலேசிய ஏர்லைன்ஸ் மறுப்பு

மும்பை , நவ 27 – மும்பை விமான நிலையத்தில் மலேசிய பயணிகள் எவரும் நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டு தவிக்கவில்லை என மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொழிற்நுட்ப பிரச்சனை காரணமாக MH 165 விமானம் மும்பை விமான நிலைத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டனர் என மலேசிய ஏர்லைன்ஸ்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமையன்று லண்டனிலிருந்து கோலாலம்பூர் திரும்பிக் கொண்டிருந்த எம்.எச் 165 விமானம் டோஹாவில் நிறுத்தப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர்ந்தபோது தொழிட்நுட்ப பிரச்சனை காரணமாக அவ்விமானம் மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது , அனைத்து பயணிகளும் இதர விமானங்கள் மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் மூலம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கிடையே தாயகம் திரும்பியதாக அந்த பேச்சாளர் தெரிவித்தார். பயணிகளுக்கு தங்கும் வசதி ,உணவு மற்றும் போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார். உள்நாட்டு குடிநுழைவு கொள்கையின் காரணமாக மும்பை விமான நிறுவனத்தில் தாமதம் ஏற்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!