Latestமலேசியா

அன்வார் பிரதமராகுவதற்கு இதர கட்சி எம்.பிக்களின் ஆதரவைபெறும் முயற்சியில் பி.கே.ஆர் – சைபுடின்

கோலாலம்பூர், ஏப் 27 – அன்வார் பிரதமராகுவதற்கு இதர கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பி.கே.ஆர் முயற்சிகளை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution தற்காத்துப் பேசியுள்ளார். அவர்களது நடவடிக்கை கட்சி தாவுவதற்கு இணையாக இல்லையென அவர் விவரித்தார். கட்சி தாவாமலேயே நட்பின் அடிப்படையில் அன்வார் பிரதமராகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வழங்க முடியும். எங்களிடம் 100 எம்.பிக்கள் உள்ளனர். அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவுக்கு 112 எம்.பிக்களின் ஆதரவு தேவை . மேலும் சில எம்.பிக்களின் ஆதரவைத்தான் நாங்கள் திரட்டுகிறோம் என Saifuddin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!