Latestமலேசியா

அம்னோ அரசியல் விவகாரப் பிரிவு அவசரக் கூட்டத்தை நடத்தியது ;தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு உத்தரவா?

கோலாலம்பூர், ஆக 25 – முன்னாள் பிரதமரும் அம்னோவின் ஆலோசகருமான டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் எஸ்.ஆர்.சி இண்டர்நேசனனல் மேல் முறையீட்டு வழக்கில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டதால் அம்னோவின் முக்கிய தலைவர்களைக் கொண்ட அரசியல் விவகாரப் பிரிவு நேற்றிரவு அவசரக் கூட்டத்தை நடத்தியது. எனினும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு அடையாளமாக அவர்களில் எவரும் ஊடகவியலாளர்களிடம் பேசவில்லை. மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு பிறகு அம்னோ தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் காத்திருந்த ஊடகவியலாளர்களை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் அந்த வழியாக வெளியேறவில்லை. கடுமையாக போலீஸ் பாதுகாப்பு இருந்த மாற்று நுழைவாயில் வழியாக நேற்றிரவு மணி 11.45 அளவில் அம்னோ தலைவர்கள் வெளியேறினர். இந்த கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி, துணைத்தலைவர் முகமட் ஹசான், மூன்று உதவித் தலைவர்களான இஸ்மாயில் சப்ரி, மாட்ஷீர் காலிட், காலிட் நோர்டின், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பேரா, சிலாங்கூர், திரெங்கானு மாநில அம்னோ தலைவர்களும் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!