Latestமலேசியா

ஆண்டுதோறும் 5,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்

சுங்கை சிப்புட், ஆக 24- ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதற்காக ஆண்டுதோறும் 5,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதன்மை கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஷி ஜீடின் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் 4,000 முதல் 5,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இவ்வாண்டு முதல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அவர் கூறினார். பாடங்களுக்கான அணுகுமுறையில் கல்வி அமைச்சு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப இது அமைவதாக ரட்ஷி ஜீடின் கூறினார். தாம் முதல் முறையாக கல்வி அமைச்சுக்கு பொறுப்பேற்றபோது 18,702 வேலை வாய்ப்புகள் காலியாக இருந்தன. அதன்பிறகு ஒரு முறை 16,000 பேரை நாம் வேலைக்கு சேர்த்தோம் என அவர் தெரிவித்தார். ஆசிரியர் வேலைக்கு நீண்ட காலமாக ஆள் எடுக்கப்படவில்லை என்பதால் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை இருந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!