Latestஉலகம்

ஆர்டெமிஸ் நிலவுப் பயணத்தை மீண்டும் ஒத்தி வைத்தது அமெரிக்கா

நிலவில் கால் பதிக்கும் ஆர்டெமிஸ் 1 பயணத்தை மீண்டும் ஒத்தி வைத்துள்ளது, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா.

ஆகக் கடைசியாக இம்மாதம் 27-ஆம் தேதிக்கு அப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக, தனது வலைத்தள பதிவில் நாசா குறிப்பிட்டுள்ளது.

எனினும், தொழிட்நுட்ப குழுவின் சோதனை நடவடிக்கைகள் முழுமையாக இலக்கை எட்டினால் மட்டுமே அது உறுதிச் செய்யப்படும் என நாசா தெரிவித்தது.

குறிப்பாக, ஆர்தெமிஸ் 1 பயணத்திற்கு பயன்படுத்தப்படவிருக்கும் ராக்கெட் மீதான சோதனை முழுமை பெற வேண்டும்.

இல்லையென்றால், அது நிறுவப்பட்ட இடத்திற்கு மீண்டும் அனுபப்படும்.

அதனால், பயணம் இன்னும் சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படலாம் எனவும் நாசா கோடிகாட்டியுள்ளது.

திட்டமிட்டபடி இம்மாதம் 27-ஆம் தேதி ஆர்டெமிஸ் 1 பயணம் தொடங்கினால், நவம்பர் ஐந்தாம் தேதி ஓரியான் விண்கலம் ராக்கெட்டை விட்டு பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நிலவில் கால்பதிக்கும் முயற்சியாக அமெரிக்கா ஆர்டெமிஸ் 1 திட்டத்தை தொடங்கியது.

இந்த முதல் ஆர்டெமிஸ் திட்டம் மனிதர்கள் இல்லாமல் – 42 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும்.

அப்பயணம் வெற்றி பெற்றால், ஆர்டெமிஸ் II தொடரும்.

ஆனால், இரண்டாவது பயணத்தில் விண்வெளி வீரர்கள் இடம்பெற்றிருப்பர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!