Latestஉலகம்

ஆர்ப்பரிக்கும் கடல் அலையா? மேகக் கூட்டங்களா ?

மினசோட்டா, ஜூன் 27 – வானில் தோன்றியது மேகக் கூட்டங்களா அல்லது ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளா என ஒருகணம் பார்ப்பவரை குழப்படைய வைத்திருக்கின்றது அமெரிக்காவில் பெண் ஒருவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று.

வானில், புயல் மேகக் கூட்டங்கள் கூடத் தொடங்கியபோது , அந்த வியக்கத் தகும் காட்சியினை தாம் எடுத்ததாகக் கூறியிருக்கின்றார் Theresa Birgin Lucus என்பவர் .

தொடக்கத்தில், தான் வீட்டிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என மகளுக்கு காட்டுவதற்கு , நொடியில் யோசிக்காமல் எடுத்தது தான் அந்த படம். பின்னர் விட்டை அடைந்தப் பின்னர் , மகள் கூறிய பின்னரே தான் எடுத்த படத்தில் இருந்த அதிசயத்தினைக் கண்டு தாமே ஒரு கணம் பிரமித்துப் போனதாக அந்த பெண்மணி தெரிவித்தார்.
அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததோடு, புகைப் போட்டிக்கும் அப்படத்தை அனுப்பி வைத்திருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!