Latestமலேசியா

ஆற்றில் குப்பைகளை கொட்டிய லோரி ஓட்டுனர் கைது

செப் 30- ஜொகூர், பொந்தியான், Sungai Wak Rabun Batu 33 பாலத்தின் மேலிருந்து, குப்பைகளை ஆற்றில் வீசிய லோரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுனர் குப்பைகளை ஆற்றில் வீசும் காணொளி ஒன்று சமூக அகப்பக்கங்களில் பரவலாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை மணி ஏழு வாக்கில், பொந்தியான் நகரில் அந்த 52 வயது ஆடவர் கைதுச் செய்யப்பட்டார்.

சம்பவம் நிகழ்ந்த ஐந்து மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டதை, ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாரூல் ஜாமான் மாமாட் உறுதிப்படுத்தினார்.

முதலில் சம்பந்தப்பட்ட ஆடவரை அவரது இல்லத்தில் தேடும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

பின்னர் அவர் தொடர்புக் கொள்ளப்பட்டு, பொந்தியான் நகரில் கைது செய்யப்பட்டார்.

சிறுநீர் பரிசோதனையில் அவ்வாடவர் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது.

எனினும், அவ்வாடவருக்கு எதிராக போதைப் பொருள் உட்பட பழைய குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

Sungai Wak Rabun Batu 33 பாலத்தில், JEL5338 எனும் பதிவு எண்ணை கொண்ட தனது ஒரு டன் லோரியை நிறுத்திய ஆடவர் ஒருவர், அதிலிருந்து குப்பைகளை ஆற்றில் கொட்டும் 36 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

அந்த காணொளியை கண்ட, மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் ஙாசி அது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு போலீசாரை கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!