Latestஉலகம்

இலங்கையில் ராணுவ புரட்சி ஏற்படுமா ? தற்காப்பு படைகளின் உயர் அதிகாரி மறுப்பு

கொழும்பு, மே 12 – இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்கும் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டவும் அதிகாரத்தை ராணுவம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலை அந்நாட்டின் தற்காப்பு படைகளின் உயர் அதிகாரி மறுத்துள்ளார்.

கொழும்பில் இன்னமும் பதட்டமான நிலை இருந்துவருவதால் ராணுவ துருப்புக்கள் அந்த நகரில் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கலவரத்தில் ஈடுபடுவோர் மற்றும் பொதுத் சொத்துக்களை நாசப்படுத்தும் தரப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி முப்படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் அதிகாரத்தை ராணுவம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் அதிகாரத்தை எடுத்துக்கெள்வதற்கு புரட்சி ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லையென எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. எதிர்க்கட்சிகளின் அந்த குற்றச்சாட்டை இலங்கை தற்காப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னேவும் மறுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!