
தெஹ்ரான், ஜூன் 8 – ஈரானின் மத்திய பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் மாண்டனர். அந்த சம்பவத்தில் காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மீட்புக் குழுவின் அதிகாரி Mojtaba Khamenei தெரிவித்தார். காயம் அடைந்தவர்களில் 12 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனதாகவும் அவர் கூறினார். 348 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தண்டவாளத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் மோதிய பின் தடம் புரண்டதாக ஈரான் ரயில்வே நிறுவனத்தின் துணைத் தலைவர் Mir Hassan Moussavi உறுதிப்படுத்தினார்.