Latestஉலகம்

உக்ரைய்னில் இந்திய மாணவர் காயம் அடைந்தார்

புதுடில்லி, மார்ச் 4 – உக்ரைய்ன் தலைநகர் கீவ் வட்டாரத்தில் இந்திய மாணவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். எற்கனவே கர்நாடாகவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் ரஷ்ய படைகளின் தாக்குதலால் மரணம் அடைந்துள்ள வேளையில் தற்போது மற்றொரு மாணவர் காயம் அடைந்ததை இந்திய சிவில் விமான போக்குவரத்து இணையமைச்சர் வி.கே சிங் உறுதிப்படுத்தினார்.

கீவில் இருந்த வெளியேறிய இந்திய மாணவர் சுடப்பட்டதால் அவர் பாதியிலேயே திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முடிந்தவரை இழப்பு எதுவும் ஏற்படாமல் இந்தியர்களை வெளியேற்றும் நடடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் வி.கே சிங் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!