Latestமலேசியா

உலகின் அதிக வயதான நபர் மலேசியாவில் வசிக்கிறாரா ?

பாலோ, மார்ச் 2 – உலகிலே அதிக வயதான நபர் மலேசியாவில் வசிக்கிறாரா ? அவருக்கு வயது 122 -ஐ எட்டியுள்ளதா?
அப்படியெனில், உலகிலே அதிக வயதான நபர் எனும் அதிகாரப்பூர்வமற்ற சாதனையை அவர் வைத்திருக்கக் கூடும்.

தற்போது உலகிலே அதிக வயதான நபர் எனும் சாதனையை வைத்திருக்கும் ஜப்பானிய மூதாட்டி kane Tanaka- விற்கு வயது 119- ஆகும்.

இவ்வேளையில், நாட்டில் வாக்காளர்களை இயல்பாகவே பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்திருப்பதின் மூலம், வாக்காளர் பட்டியலில் 122 வயதுடைய மூதாட்டி வாக்காளராக இருப்பது தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பதிவின் படி, அந்நபர் ஜோகூர் , பாலோவைச் ( Paloh) சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1,900 –ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பிறந்ததாகவும் விபரம் காட்டுகிறது.

ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. இதனிடையே, அந்த விபரம் தனக்கு தெரிய வந்தபோது தாமும் ஆச்சரியப்பட்டதாக பாலோ சட்டமன்ற உறுப்பினர் ஷெக் உமார் பகாரிப் அலி ( Sheikh Umar Bagharib Ali ) கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் அந்த தகவலை வெளியிட்டிருந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும். எனினும் அவரது விபரங்கள் முழுமையாக தெரிய வராத நிலையில் அந்த வயதான நபர் இருக்குமிடம் தமது தரப்புக்கு தெரியவரவில்லை என அவர் கூறினார்.

இவ்வேளையில், அந்த 122 வயதான மூதாட்டி இம்மாதம் மார்ச் 12-ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கு வாக்களிக்க வருவாரா ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!