Latestஉலகம்

உலகின் வயதான பாண்டா கரடி இறந்தது

ஹோங் கோங், ஜூலை 22 – உலகின் மிகவும் வயதான ஆண் பாண்டா கரடி, ஹோங் கோங் (Hong Kong)கில் நேற்று உயிரிழந்தது. ஆன் ஆன் (An An) என்றழைக்கப்பட்ட அந்த பாண்டா கரடிக்கு 35 வயது தான் என்றாலும், அது மனிதர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும் போது 105 வயதுக்கு ஈடானதாகும்.

கடந்த சில வாரங்களாக ஆன் ஆன் பாண்டாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. உணவு உட்கொள்வது குறைந்து இறுதியாக உணவுண்பதையே அது நிறுத்தியதாக, அதனைப் பராமரித்து வந்த பூங்கா நிர்வாகம் கூறியது.

1997ஆம் ஆண்டு சீனாவிலுள்ள பாண்டா கரடிகள் பாதுகாப்பு-ஆராய்ச்சி மையம், ஆன் ஆன் கரடியையும் ஜியா ஜியா எனும் மற்றொரு பெண் பாண்டா கரடியையும் ஹோங் கோங்கிற்குப் பரிசாக வழங்கியிருந்தது.

ஜியா ஜியா, ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு தனது 38ஆவது வயதில் உயிரிழந்த நிலையில் தற்போது ஆன் ஆன் பாண்டா கரடியும் இறந்திருப்பது, ஹோங் கோங் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்விரண்டு கரடிகளும் உள்ளூர் மக்களிடமும் சுற்றுப்பயணிகளிடமும் நட்பு ரீதியிலான பிணைப்பைக் கொண்டிருந்தன என, கரடிகளைப் பராமரித்து வந்த பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!