Latestஉலகம்மலேசியா

ஊடக புகைப்படக்காரருடன் சமிராவின் வழக்கறிஞர் தகராறு

ஷா அலாம், ஜூன் 21 – Cradle fund தலைமை செயல் அதிகாரி Nazrin Hassan கொலை வழக்கு விசாரணையில் Samirah Muzaffar மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை பிரதிநிதித்த வழக்கறிஞருக்கும் ஊடக புகைப்படக்காரர் ஒருவருக்குமிடையே தள்ளு முள்ளும் தகராறும் இன்று உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டது. Samirah மற்றும் இதர வழக்கறிஞர்களுடன் வழகறிஞர் S. Suresh நீதிமன்றத்திற்கு வந்தபோது அவர்களை படம் எடுப்பதற்காக ஊடகங்களின் புகைப்படக்காரர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர்கள் செல்வதற்கு வழிவிடும்படி புகைப்படக்காரர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். அந்த நேரத்தில் ஒரு புகைப்படக்காரரை சுரேஸ் தட்டியதாக கூறப்பட்டதால் அவருக்கும் அந்த புகைப்படக்காரருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே அந்த சம்பவத்தில் வழக்கறிஞர் சுரேஸின் தலையில் புகைப்படக்காரர் ஒருவர் தனது கேமராவினால் தாக்கியதால் அவர் காயத்திற்கு உள்ளானதோடு அவரது தலையில் இரத்தமும் வெளியேறியதாக வழக்கறிஞர் முகமட் ஷாபி இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!