Latestஉலகம்

எரியும் லாரியை துணிகரமாக பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டி சென்ற ஆடவர்

கோழிக்கோடு, பிப் 4 – கேரளா, கோழிக்கோடு பகுதியில், லாரி ஒன்று ஏற்றி சென்ற வைக்கோல் கட்டுகள் , மேல் நிலையில் இருக்கும் மின் இணைப்பின் மீது பட்டதை அடுத்து தீப் பற்றிக் கொண்டது.

திடீரென தீப்பற்றியதால் பதற்றம் அடைந்த ஓட்டுநர் லாரியிலிருந்து தப்பியோடினார். அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களில் ஒருவர், தீயினால் அருகிலுள்ள இடங்கள் சேதமடையாமல் இருக்க , அந்த லாரியை , காலியான நிலப் பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அதன் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வேளை, துணிச்சலாக செயல்பட்டு பெரும் சேதங்களை தவிர்த்த அந்த ஆடவரைப் பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!