Latestமலேசியா

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பட்டினியால் இறந்தார்களா? நீடிக்கும் மர்மம்

இந்தோனேசியா, ஜகார்த்தா, நவ 14- Kalideres எனுமிடத்தில், பட்டினியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த மர்ம சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அந்நால்வரும் நீண்ட நாட்களாக உண்ணாமலும், நீர் பருகாமலும் இருந்ததால், அவர்களின் உடல் “வறண்ட” நிலையில் கண்டெடுக்கப்பட்டது என கூறப்படும் ஊகத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, உள்நாட்டு DetikNews அகப்பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

71 வயது Rudyanto Gunawan, 68 வயது Renny Margaretha, 68 வயது Budianto Gunawan, 42 வயது Dian ஆகியோர் அச்சம்பவத்தில் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்நால்வரும், கடந்த வியாழக்கிழமை அவர்களின் இல்லத்தில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.

கடந்த மூன்று வாரங்களில், வெவ்வேறு சமயங்களில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

பட்டினியால் அவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ள போதும், அச்சம்பவம் தொடர்பில், தடயவியல் பிரிவின் சோதனையும், விசாரணையும் தொடர்கின்றன.

சவப் பரிசோதனையில், வெகு நாட்களாக உணவு உண்ணாததாலும், நீர் பருகாததாலும், தசைகள் சுறுங்கி, காய்ந்து அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்ததாக, ஜகார்த்தா பாராட் போலீஸ் தலைவர் தெளபிக் இக்சான் தெரிவித்தார்.

எனினும், உண்மையில் உணவு இல்லையென்றால், தமது சகோதரி கட்டாயம் தம்மை தொடர்புக் கொண்டிருப்பார் என, உயிரிழந்த Margaretha-வின் தங்கையான 64 வயது Ris Astuti அச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே சமயம், உணவு உண்ண முடியாத அளவுக்கு தமது சகோதரி வரிய நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!