
கம்பார், அக் 2- பேராவில் கம்பாரில் புதிய மாவட்ட மருத்துவமனை விரைவில் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. இதற்கான நில உரிமை விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுவிட்டதால் நிர்மாணிப்பு பணி விரைவில் தொடங்கும் என பேரா ஆட்சிக் குழுஉறுபினர் ,சிவநேசன் தெரிவித்தார். கம்போங் சங்கட் பாரு வுக்கு அருகே உத்தேச மருத்துவமனைக்கான நிலத்தை பார்வையிட்ட பின் சிவநேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
11.7 ஹக்டர் பகுதியில் புதிய கம்பார் மருத்துவமனை நிர்மாணிக்கடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் . இந்த மருத்துவமனைக்கான உத்தேச இடம் துவளங் செக்க, மாலிம் னவர் மற்றும் கேரன்ஜி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. கோப்பேங்கிற்கு அருகிலேயே இந்த இடம் இருப்பதால் புதிதாக கட்டப்படும் கம்பார் மாவட்ட மருத்துவமனை கோப்பேங் மற்றும் பத்து காஜா வட்டார மக்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என்றும் சிவநேசன் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சேமின், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் ஷாஷா பவானி, துவாலாங் செக்கா சட்டமன்ற உறுப்பினர் அல்லான் ஹெல்மி ஆகியோருடன் நில அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.