Latestமலேசியா

காரோட்டிய 10 வயது சிறுவன் ; பெற்றோர் போலிசிடம் சரண்

பொந்தியான், மே 14 – 10 வயது சிறுவன் தனது தம்பி – தங்கைகளை ஏற்றிக் கொண்டு, சொந்தமாக பள்ளிக்கூடத்திற்கு காரோட்டி சென்ற காணொளி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்த சிறுவன், தனது 6 வயது தங்கையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக தனியொரு ஆளாக சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த காரில் அச்சிறுவனின் மூன்று வயது தம்பியும் இருந்துள்ளார்.
தாயார் அழைத்துச் செல்ல தாமதமானதால் , அந்த பையனே காரை ஓட்டியதாக நம்பப்படுகிறது.

இவ்வேளையில் , எப்படி பெற்றோர் இந்தளவுக்கு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள முடியுமென வலைத்தளவாசிகள் விலாசி எடுத்திருக்கின்றனர்.

இதனிடையே அந்த சம்பவம் போலிசாரின் கவனத்திற்கு வர அவர்கள் விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.
விசாரணைக்கு உதவ அச்சிறுவனின் பெற்றோர் தாங்களாகவே போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!