Latestமலேசியா

Dublin விமான நிலையத்தில் 3 மில்லியன் ரிங்கிட் கஞ்சா பறிமுதல் மலேசியருக்கு எதிராக குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 1 – டுப்லின் விமான நிலையத்தில் 580,000 பவுண்ட் அல்லது 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் மலேசியர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
Ireland ந்தில் பதிவு பெற்ற முகவரி எதனையும் கொண்டிருக்காத 39 வயதுடைய அந்த நபர் புதன்கிழமையன்று விமான நிலையம் வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டாக the Irisah Times பத்திரிகை செய்தி வெளியிட்டது. அந்த ஆடவரின் பயணப்பெட்டியில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடக்கத்தில் Ballymun Garda நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அந்த நபர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டபோதைப்பொருள் மற்றும் விற்பனைக்கும் விநியோகிப்பதற்கும் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருளை தவறான பயன்படுத்தும் Irealand சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த போதைப் பொருளை இறக்குமதி செய்தது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் தாம் விளக்கம் அளித்து விட்டதாகவும் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கப்போவதில்லையென அந்த நபர் நிதிமன்றத்தில் தெரிவித்தார். ஜாமின் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பதால் அவருக்கு எதிரான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என கூறிய நீதிபதி Shalom Binchy அவரை தடுத்து வைப்பதற்கு உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!