Latestமலேசியா

கிளந்தானில் 12 வயதுக்கு கீழ்பட்ட 1,000கும் அதிகமான சிறார்களுக்கு கோவிட் தொற்று

கோத்தா பாரு, மே 28 –  கிளந்தானில், இதுவரை பதிவாகிய  கிட்டதட்ட ஆறாயிரம்  கோவிட் -19 தொற்று சம்பவங்களில்,  18 விழுக்காடு சம்பவங்கள் அதாவது ஆயிரத்திற்கும் அதிகமானோர்,  12 வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள் ஆவர்.

சிறார்களை உட்படுத்திய கோவிட் தொற்று சம்பவங்களின் அதிகரிப்பு, கவலையை ஏற்படுத்தியிருப்பதாக கிளந்தான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இசானி ஹூசின் தெரிவித்தார்.

அதையடுத்து, பிள்ளைகளை பொதுவிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வேலையிலிருந்து திரும்பும் பெற்றோர்கள், உடலை தூய்மைப் படுத்திக் கொண்ட பின்னரே தங்களது பிள்ளைகளை நெருங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!