Latestஉலகம்

கெய்ரோவில் பயணிகள் பேருந்து, லாரியை மோதியது; 23 பேர் பலி, 33 பேர் காயம்

கெய்ரோ, ஜூலை 20 – எகிப்தின் கிழக்கே, நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர், மேலும் 33 பேர் காயமடைந்தனர்.

லாரியின் ஓட்டுனர், டயரை மாற்றுவதற்காக அதனை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். அச்சமயம் அங்கு வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்னால் மோதியதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் பேருந்து முற்றிலுமாக நசுங்கி சேதமடைந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். காயமடைந்தாவர்கள் அனைவரும் அம்புலன்ஸ் வண்டிகளில் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருக்கும் நிலையில், சிலரது நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!