Latestமலேசியா

கே.எல் வெல்னெஸ் சிட்டி ஏற்பாட்டில் மெதுவோட்ட போட்டி

கோலாலம்பூர், அக் 6 – மலேசியர்களிடையே ஆரோக்கிய வாழ்க்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மெது ஒட்டப் போட்டியை சொத்துடமை நிறுவனமான கே.எல் . வெல்னெஸ் சிட்டி ( K .L Wellness City ) ஏற்பாடு செய்துள்ளது.

16 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கென மூன்று பிரிவுகளில் இப்போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 11ஆம் தேதி புக்கிட் ஜாலில் கே.எல் வெல்னெஸ் சிட்டியில் இப்போட்டி நடைபெறும் என கே.எல் வெல்னெஸ் சிட்டியின் இயக்குனர் டத்தோஸ்ரீ வின்சன்ட் தியோ தெரிவித்தார்.

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 5,000 ரிங்கிட், 2ஆவது பரிசாக 2,500 ரிங்கிட் மூன்றாவது பரிசாக 1,000 ரிங்கிட், 4ஆவது பரிசாக 500 ரிங்கிட் 5ஆவது பரிசாக 200 ரிங்கிட் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது உடல் திடகாத்திரம் மற்றும் மனவுறுதியை வெளிப்படுத்தும் வகையில் 10 கிலோ எடையையும் தூக்கிச் செல்லவேண்டும்.

ஆரோக்கியம் மற்றும் தங்களது உடல் நல விவகாரத்தில் மலேசியர்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வின்சென்ட் தியோ கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!