Latestமலேசியா

கோம்பாக்கில் ஏரியில் மூழ்கிய 12 வயது சிறுவன்; தேடும் பணி தீவிரம்

கோம்பாக், ஆகஸ்ட் 2 – பத்து ஆராங் (Batu Arang), கம்போங் பெர்மாதா தாசிக் பீரு (Kampung Permata Tasik Biru) ஏரியில் 12 வயது சிறுவன் மூழ்கியது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை 6.45 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஷா ஆலம் மற்றும் போர்ட் கிள்ளான் நீர் மீட்புக் குழுவைச் சேர்ந்த, 24 உறுப்பினர்கள் மற்றும் பத்து ஆராங் தீயணைப்பு மீட்பு நிலையம், தாசீக் பூத்ரி மற்றும் கூவாங் தன்னார்வ தீயணைப்புக் குழுவை சேர்ந்த ஐவர், அச்சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அலுமினியப் படகுகள் மூலம் மேற்பரப்பில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!